700 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - அசாரம்பாபு மீது வழக்கு

புதன், 16 ஜனவரி 2013 (18:43 IST)
FILE
ஆன்மீகவாதி ஆஸ்ரம் பாபு மீது 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பேருந்து பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பிரபலமான ஆன்மீகவாதி ஆஸ்ரம் பாபுவின் மீது தற்போது சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி - பூனே நெடுஞ்சாலையில் ரட்லாமபகுதியிலஅமைந்திருக்கும் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை ஆன்மீகவாதி ஆஸ்ரம் பாபுவும் அவரது மகன் நாராயன் சாய் மற்றும் வேறு சிலரும் சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமித்திருப்பதாக ஜெயந்த் வைட்டமின் லிமிட்டெட்டின் பங்குதாரர் புகார் அளித்துள்ளார்.

இந்த இடம் நாட்டில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களுக்கெல்லாம் 'குளுக்கோஸ்' தயாரித்து வழங்கும் ஜெயந்த் வைட்டமின் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்