தேர்தல் நடைமுறைகளை பொறுத்த வரையில், தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்புதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் ஆணையம், தனது அமைச்சகத்திற்கு கட்டுப்பட்ட அமைப்பு என்று அண்மையில் கூறியிருந்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் சர்மான் குர்ஷித்.
இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிக்கும், சல்மான் குர்ஷித் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆணையம் பிறப்பிக்கும் சில பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியது தனது அமைச்சகத்தின் பொறுப்பு என்றார்.
தேர்தல் நடைமுறைகளை பொறுத்த வரையில், தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்புதான் என்று மீண்டும் விமர்சனம் செய்தார் சல்மான் குர்ஷித்.