லோக்பால் மசோதா: சமூக சேவகர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்

செவ்வாய், 5 ஏப்ரல் 2011 (17:16 IST)
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததை தொடர்ந்து, தமது கோரிக்கையை வலியுறுத்தி ஹசாரே இன்று டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

உண்ணாவிரத பந்தலில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் பங்களிப்பு இல்லாமல் லோக்பால் மசோதாவை அரசு உருவாக்கினால் அது ஜனநாயகமாக இருக்காது என்றும், அதிகாரவர்க்கமாகத்தான் இருக்கும் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்