அசாம் மாநிலத்தில் 2 நாட்களாக முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வரும் குரேஷி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வழக்கமாக, வாக்காளரின் பெயர், எண், வாக்குச்சாவடி ஆகிய விவரங்கள் அடங்கிய வாக்கு சீட்டுகளை அரசியல் கட்சிகள்தான் வீடு வீடாக வழங்கும். ஆனால், வரும் சட்டப்பேரவை தேர்தல்களின்போது வாக்கு சீட்டுகளை தேர்தல் ஆணையமே நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்போகிறது என்றார்.
தேர்தல் ஆணையத்தின் வட்டார அளவிலான அதிகாரிகள் இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று வழங்குவார்கள் என்றும் அரசியல் கட்சிகள் இனிமேல் வாக்குச் சீட்டுகளை வழங்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.