நேற்று நள்ளிரவு 12 மணி 57 நிமிடங்கள் அளவில் அந்தமான் நிகோபார் தீவுகளில் கடலுக்கு அடியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்று பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்காசியாவின் 6 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.
சென்னையில் பல பகுதிகளிலும் இதன் விளைவாக நடுக்கம் உணரப்பட்டது. கோயமேடு, சிந்தாதிரிப்பேட்டை, திருவான்மியூர், சாந்தோம், சூளைமேடு, ராயப்பேட்டை, அமிஞ்சிக்கரை, ஆகிய பகுதிகளில் 20 வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறி தெருவுக்கு வந்தனர்.
சென்னை கடற்கரையில் படுத்திருந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். நிகோபார் தீவுகளுக்கு 160 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 10.கிமீ ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ஆனால் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்தபூகம்பத்தினால் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியான்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுஅக்ளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் பின்பு விளைவுகள் இல்லாததால் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.