மாலிக்-ஆயிஷா இருவரும் குற்றவாளிகள்-முஸ்லிம் சட்ட வாரியம்

திங்கள், 5 ஏப்ரல் 2010 (21:02 IST)
ஷோயப் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால், சானியா மிர்சாவுடன் 15-ந் தேதி நடத்த இருக்கும் திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆயிஷா தரப்பு வக்கீல் கோர்ட்டை நாடியுள்ளார். மேலும் பாகிஸ்தானிலும் ஷோய்ப மாலிக் மீது வழக்கு தொடர ஆயிஷா தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால் சானியா மிர்சா, ஷோயப் மாலிக் திருமணத்துக்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இது சானியா மிர்சாவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஷோயப் மாலிக் கைது செய்யப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் சானியா மிர்சா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

ஷோயப் மாலிக், ஆயிஷா இருவரும் தங்கள் திருமண விஷயத்தில் தவறு செய்து விட்டனர். இருவரும் குற்றவாளிகள் என்று இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. டெலிபோன் திருமணத்தை முஸ்லிம் சட்ட வாரியம் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயத்தில் அதில் பிரச்சினை எழுந்ததும் உடனடியாக முஸ்லிம் பெரியவர்களை நாடி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆயிஷா மிகவும் காலதாமதம் செய்து விட்டார் என்று முஸ்லிம் சட்ட வாரியம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்