இந்திய-சீன எல்லையில் புதிதாக 50 புறக்காவல் நிலையம்: அரசு திட்டம்

ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (14:55 IST)
இந்திய-சீன எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த, புதிதாக 50 புறக்காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய புறக்காவல் நிலையங்களை இந்திய-சீன எல்லையில் அமைப்பதன் மூலம், இந்திய-திபெத் எல்லைக் காவலர்கள் குறுகிய தூர ரோந்துகளை மேற்கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி இந்திய-சீன எல்லையில் உள்ள புறக்காவல் நிலையங்கள் இடையிலான தூரமும் 50 கி.மீட்டருக்குள் குறையும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்