வேளாண் கடன் இலக்கு ரூ 3.25 லட்சம் கோடி

திங்கள், 6 ஜூலை 2009 (19:48 IST)
2009-10 ஆம் ஆண்டில் வேளாண் கடனுக்கு ரூ.3,25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ‌இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்த ‌நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் பிரணாப் முகர்ஜி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் மேலு‌ம் கூ‌றியதாவது :

2009-10 ஆண்டில் ரூ.3,25,000 கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2008-09 ஆம் ஆண்டில் இது 2,87,000 கோடியாக இருந்தது. இந்த இலக்கை எட்டுவதற்காக ரூ.3 லட்சம் வரையில் குறுகிய கால கடன் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 7 சதவீத அளவுக்கு குறைந்த அளவில் வட்டி நிர்ணயிக்கும் திட்டம் தொடரப்படும்.

மேலும் இந்த கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துவோருக்கு கூடுதலாக ஒரு சதவீத வட்டியை குறைக்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் கடனுக்கான வட்டி 6 சதவீதமாக இருக்கும். இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மேலும் ரூ.411 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது எ‌ன்று ‌பிரணா‌ப் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்