லாரி போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது பற்றி இன்று முடிவு
வியாழன், 2 ஜூலை 2009 (09:02 IST)
பெட்ரோல், டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் மத்திய அரசு உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, சரக்கு போக்குவரத்து கட்டணங்களையும் உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் மூத்த நிர்வாகி தீபக் சச்தேவா, புதுடெல்லியில் இன்று நடைபெறும் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தியதால், லாரி போக்குவரத்து கட்டணத்தையும் உயர்த்தும் நிலைமைக்கு தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
லாரி போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டால், காய்கறி மற்றும் பழவகைகளின் விலையும் உயரும் என்று புதுடெல்லி காய்கறி வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர்.