மகாராஷ்டிராவில் காவல்துறை உஷார்நிலை

செவ்வாய், 30 ஜூன் 2009 (19:21 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் டி.ஜி.பி விர்க் தெரிவித்துள்ளார்.

மத்திய உளவுத்துறையிடம் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் புதிதாக எச்சரிக்கை தகவல் வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டதுடன், மக்களும் கண்காணிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக மும்பையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விர்க் கூறினார்.

என்றாலும் உளவுத் துறையிடம் இருந்து எந்தமாதிரியான த்கவல் வந்தது என்பதைத் தெரிவிக்கவில்லை.

மும்பை நகரம் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாக மாநகர காவல்துறை ஆணையர் டி. சிவானந்தன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். சாலை, விமானம் அல்லது கடல் இவற்றில் எந்த மார்க்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் இருக்கலாம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்