4வது கட்டத் தேர்தல்: 57% வாக்குப் பதிவு!

வியாழன், 7 மே 2009 (20:40 IST)
மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 85 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று நடந்த தேர்தலில் 57 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மிக குறைந்த அளவாக 24 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் ஆர். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் 65 விழுக்காடு, ஹரியானாவில் 63 விழுக்காடு, இராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலங்களில் 50 விழுக்காடு, பீகாரில் 37 விழுக்காடு என்று வாக்குகள் பதிவாகியுள்ளது.

இது வாக்குப் பதிவு முடிந்தவுடன் கிடைத்த விவரங்களின் அடிப்படையிலானது என்று கூறிய பாலகிருஷ்ணன், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில்தான் மிக மிகக் குறைவாக பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்