தலைநகர் டெல்லியில் கடந்த 2001ஆம் ஆண்டு அர்ஷத்கான் என்பவர் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்த 6 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 6 பேர் மீதான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
"நாங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத் உல்-ஜிகாதி இஸ்லாமி இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். எங்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் இந்தியச் சிறையில் உள்ளனர். அவர்களை மீட்க இந்தியாவில் உள்ள பிரபலங்களைக் கடத்தத் திட்டமிட்டோம். நீண்ட யோசனைக்குப் பிறகு கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், கங்கூலி ஆகியோரைக் கடத்தத் தேர்வு செய்தோம். இதற்காக நாங்கள் 6 பேரும் இந்தியாவிற்கு வந்தோம்" என்று அர்ஷத்கான் கூறியுள்ளான் என்று அனிதா கூடா தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.