மக்களவைத் தேர்தலில் போட்டியா? வெங்சர்க்கர் மறுப்பு

சனி, 31 ஜனவரி 2009 (16:49 IST)
மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வெங்சர்க்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்சர்க்கர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் என்னை அணுகவில்லை; நானும் எந்தக் கட்சியிடமும் போட்டியிட அனுமதி கேட்கவில்லை என்றார்.

மும்பையின் வடக்கு மத்திய தொகுதியில் சிவசேனா கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக வெங்சர்க்கர் நிறுத்தப்படுவார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று கூறியிருந்தார்.

எனினும், அடுத்த சில மணி நேரத்திலேயே அதுபோன்ற முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என சிவசேனாவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நீலம் கோர் தெரிவித்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்சர்க்கர் தனது தரப்பு விளக்கத்தை இன்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்