பிரதமர் மன்மோகன் சிங் இன்று வீடு திரும்புகிறார்
டெல்லி "எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இன்று வீடு திரும்புகிறார்.
கடந்த 24ஆம் தேதி இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த 28ஆம் தேதி பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது வழக்கமான பணிகளை மேற்கொண்டுவரும் பிரதமர் மன்மோகன், இன்று வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தேவைப்பட்டால் மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் அவர் வைக்கப்படுவார் என்று மருத்துவர் விஜய் டி சில்வா தெரிவித்தார்.