மார்க்சிஸ்ட் கட்சியில் கோரப்போவதில்லை - சோம்நாத்

செவ்வாய், 13 ஜனவரி 2009 (18:05 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தம்மை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு கோரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் போல்பூர் செல்லும் வழியில் பிடிஐ-க்கு சோம்நாத் சாட்டர்ஜி அளித்த பேட்டியில், கட்சியிடம் தாம் தம்மை இணைத்துக் கொள்ளுமாறு கேட்கப் போவதில்லை. கட்சியில் இருந்து நீக்கும் அளவுக்கு எவ்வித குற்றமும் தாம் இழைக்கவில்லை என்று கூறினார்.

மேற்குவங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிமன் போஸ்-க்கு அம்மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி எழுதிய கடிதத்தில், சோம்நாத் சாட்டர்ஜியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதுபற்றி சோம்நாத்திடம் கேட்டதற்கு, தமக்கு எதுவும் தெரியாது என்றும், பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்தே தாம் தெரிந்து கொண்டதாகவும் பதிலளித்தார்.

மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டால் உங்களது பதில் என்னவாக் இருக்கும் என்று கேட்டபோது, இது ஒரு சிக்கலான கேள்வி என்று அவர் கூறினார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கி மார்க்சிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுத்தது.

அதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தாம் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று சோம்நாத் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்