ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான சிபு சோரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாலும். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாலும் மிகுந்த மன வருத்தத்துடன் சிபு சோரன் காணப்பட்டதாகவும், இன்று காலை முதல் நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறலால் அவர் அவதிப்பட்டு வந்ததாக சிபுசோரன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல் அமைச்சர் பதவியில் நீடிக்குமாறு சிபு சோரனிடம் ஜார்க்கண்ட் ஆளுநர் சையது சிப்தே ரஸி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களைச் சந்தித்து ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வர் குறித்து முடிவு செய்வதற்காக இன்று காலை புதுடெல்லி செல்ல சிபுசோரன் திட்டமிட்டிருந்தார். ஆனால், உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.