பிரிட்டன் அயலுறவு அமைச்சர் வருகை

செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:13 IST)
மும்பையில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி, 2 மாத காலம் நெருங்கும் நிலையில், பிரிட்டன் அயலுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் 3 நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ளார்.

மும்பை தாக்குலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் அமைச்சரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதாக புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த முக்கிய ஆதாரங்களை பிரிட்டன் இந்தியாவிற்கு அளித்திருப்பதாக தூதரக வட்டாரங்களை மேற்கொள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் பிரதமர் கோர்டோன் பிரதமர் கடந்த மாதம் இந்தியா வந்ததும், மும்பை தாக்குதல்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

டேவிட் மிலிபேண்ட் தமது இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

தாஜ் மற்றும் ட்ரைடண்ட் ஹோட்டல்களில் நடைபெறும் கூட்டங்களிலும் மிலிபேண்ட் பேசுகிறார்.

மும்பை தாக்குதல்களில் பிரிட்டனைச் சேர்ந்த சிலரும் உயிரிழந்திருப்பதால், டேவிட் மிலிபேண்ட்-ன் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்