டெல்லியில் கடும் மூடுபனி; விமானங்கள் தாமதம்

செவ்வாய், 13 ஜனவரி 2009 (12:20 IST)
தலைநகர் டெல்லியில் கடுமையான மூடுபனி காரணமாக இன்று காலை, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் வந்திறங்குவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

விமான நிலைய ஓடுபாதையில் போதிய வெளிச்சமின்மையால் பல விமானங்களின் புறப்பாடு, விமானங்கள் தரையிறங்குவதும் பாதிப்புக்குள்ளானதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 9 மணி வரை மூடுபனி காணப்பட்டதாகவும், இதனால் 18 விமானங்கள் தாமதமானதாகவும், 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறின.

வெப்துனியாவைப் படிக்கவும்