முதல்வர்களுடன் ‌பிரதம‌ர் ஆலோசனை

வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:46 IST)
பயங்கரவாதத்தஎதிர்கொள்வதகுறித்தபுதுடெல்லியில் வருமசெவ்வாய்க்கிழமை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமையிலமாநிமுதலமைச்சர்கள் மாநாடநடைபெறுகிறது.

பயங்கரவாதம் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்மாநாட்டிலமுதலமைச்சர்களுடன் ‌பிரதம‌ர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் செயல்பாடு குறித்தும் இந்த மாநாட்டில் முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

உளவு அமைப்புகளின் பணிகளை தீவிரப்படுத்துவது, தகவல்களை பகிர்ந்து கொள்வது, கடலோர பாதுகாப்பு, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினருக்கு கூடுதல் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் தேசிய கமாண்டோ படை மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதுகுறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பயங்கரவாத பிரச்சனையில் மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஏற்கெனவே மாநில முதலமைச்சர்களுக்கு ‌பிரதம‌ர் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்