பாதுகாப்பு படையினருக்கு தனி ஊதியக்குழு அமைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை சிவிலியன் ஊதியக் குழுவின் கீழ் இருந்த பாதுகாப்பு படையினர் புதிதாக அமைக்கப்படும் தனி ஊதியக் குழுவில் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும், 6 மத்திய ஊதியக் குழு பரிந்துரையின் படி 12 ஆயிரம் லெஃப்டினன் கலோனல் பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான உத்தரவையும் பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.