ரூ.6,000 கோடியில் நீர்நிலைகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (19:51 IST)
11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மேற்கொள்ளும் வகையில் சுமார் ரூ.6,000 கோடி செலவிலான நீர்நிலைகளை செப்பனிடுதல், சீரமைப்பு, புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் 23,000 நீர் நிலைகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் 16.8 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் செம்மைப்படுத்தப்படும்.
இந்த திட்டங்கள் முடியும் பட்சத்தில் சுமார் 7.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கூடுதல் விவசாய நிலங்களாக மாறும்.
இத்திட்டத்தில் நீர்நிலை தொட்டிகளை சீரமைத்தல், நீர்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துதல், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரித்தல், விவசாயம், தோட்டக்கலை உற்பத்தியை அதிகரித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், சுற்றுலா வளர்ச்சி, கலாச்சார நடவடிக்கைகள், போதுமான அளவு குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும்.