கோவை உள்பட 14 இடங்களில் தேசிய பல்கலைக் கழகம்
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (19:29 IST)
தமிழ்நாட்டில் கோவை உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 14 தேசிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகங்களை உலகத்தரத்துக்கு இணையாக மேம்படுத்த 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கோவை, ஆந்திராவில் விசாகப்பட்டினம், அஸ்ஸாமில் கவுகாத்தி, பீகாரில் பாட்னா, குஜராத்தில் காந்திநகர், கர்நாடகாவில் மைசூர், மத்தியப் பிரதேசத்தில் போபால், மஹாராஷ்டிராவில் புனே, ஒரிசாவில் புவனேஸ்வர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், உத்தரப் பிரதேசத்தில் நொய்டா, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மொத்தம் 14 தேசிய பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட உள்ளதாக அவர் கூறினார்.