இந்தியாவில் இருந்து 10 லட்சம் கிலோ உணவு தானியம் கடத்தல்!
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:14 IST)
இந்தியாவில் இருந்து நேபாள, வங்காளதேச எல்லைகள் வழியாக சுமார் 10 லட்சம் கிலோ உணவு தானியம் கடத்தப்பட்டுள்ளது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது, கடந்த நவம்பர் 10 வரை இந்திய- நேபாள எல்லை வழியாக 3,13,410 கிலோவும், இந்திய- வங்காளதேச எல்லை வழியாக 6,63,883 கிலோவும் உணவு தானியம் கடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 2,92,773 கிலோ அரிசி, 2,91,112 கிலோ கோதுமை, 320 கிலா சர்க்கரையும், 79,668 கிலோ இதர தானியங்களும், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குக் கடத்தப்பட்டு உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல, சுமார் 2,56,487 கிலோ அரிசி, 14,559 கிலோ கோதுமை, 34,517 கிலா சர்க்கரையும், 7,847 கிலோ இதர தானியங்களும் உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குக் கடத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.