ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடந்து வருகிறது.
இன்றைய 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ட்ரால், பேம்போர், புல்வாமா, ராஜ்போரா, ஷோபியன், வாச்சி உள்ளிட்ட 11 தொகுதிகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு துவக்கப்பட்டது.
இதில் ராஜ்போரா, வாச்சி தொகுதிகளில் காலை 8 மணியளவிலேயே ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கக் காத்திருந்தனர். மற்ற 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமாராகவே நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மட்டும் 8 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஏதுவாக ஆயிரத்து 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 179 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.