மும்பை தாக்குதல்: சிதம்பரம் இன்று பார்வையிடுகிறார்

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (13:16 IST)
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று அந்நகருக்கு சென்றுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி காயமடைந்தவர்களை இன்று காலை நேரில் சந்தித்து அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் கூறியதாக மும்பை காவல்துறை துணை ஆணயர் அமர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்மஹால், ஓபராய் நட்சத்திர விடுதிகளையும் அவர் இன்று பார்வையிட திட்டமிட்டுள்ளதாக துணை ஆணையர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்