ஜம்முவில் தோடா மாவட்டத்தில் சந்திரகோட் அருகே சீனாப் நதியின் மீது 450 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க பக்ளிஹார் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் மின் நிலைய அணையில் இந்தியா தண்ணீர் தேக்கிவருவதால், சீனாப் நதியில் தங்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பெரும் பாதி்ப்பிற்குள்ளாகி வருகிறது என்று கூறியுள்ள பாகிஸ்தான், தங்களுக்கு நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இது இருநாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள பாகிஸ்தான், இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விவசாய உற்பத்தி இழப்பின் மதிப்பு 40 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) ரூபாய் என்று கூறியுள்ளது.