மும்பை: தாக்குதலில் இறங்கியது கமாண்டோ படை!

வெள்ளி, 28 நவம்பர் 2008 (10:30 IST)
மும்பை தாஜ் நட்சத்திர விடுதிக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதற்காக மத்திய கமாண்டோ படையினர் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.

மற்றொரு விடுதியான நாரிமன் இல்லத்தில் மேல் தளத்தில் இருந்து சுவரை உடைத்துக் கொண்டு கமாண்டோ படையினர் இன்று காலை உள்ளே புகுந்து பயங்கரவாதிகளை வெளியேற்றி, பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாதிகளின் நோக்கம், முக்கிய காவல்துறை அதிகாரிகளைக் கொல்வதே என்றும், வெளிநாட்டுப் பணயக் கைதிகளை பிடித்து வைப்பதாகத் தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தோய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

ஆனால், லஷ்கர் அமைப்பினர் தொடர்பு என்ற தகவலை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மறுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்