காஷ்மீர்: பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – இந்தியா!

சனி, 22 நவம்பர் 2008 (10:48 IST)
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து பாகிஸ்தான் தெரிவித்துள்ள கருத்துகள் அர்த்தமற்றது என்று கூறியுள்ள இந்திய அயலுறவு அமைச்சகம், அந்நாடு தனது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றுவரும் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் முகம்மது சாதிக், அத்தேர்தல் முடிவுகளை ‘அம்மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் அதிகாரப்பூர்வமான வெளிப்பாடா’ கருதக்கூடாது என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அயலுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தனது நலனை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று காட்டமாக பதிலளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்