மிக்-27 விமான விபத்து; விமானி உயிர் தப்பினார்!

திங்கள், 17 நவம்பர் 2008 (16:54 IST)
மிக்-27 ரக போர் விமானம் ஒன்று மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் அருகே ஹாசிமாரா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த விமானியும், துணை விமானியும் உயிர் தப்பினர்.

நரார்தலி என்ற இடத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானம் விழுந்த இடத்தில் இருந்த வீடு தீப்பற்றியதாகவும் அலிப்பூர்துவார் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.மிஸ்ரா தெரிவித்தார். அதில் இருந்த இரு விமானிகளும் பாரசூட்டில் குதித்து உயிர் தப்பி விட்டதாக அவர் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார். உடைந்து சிதறிய விமானத்தின் பாகங்கள் 2 கி.மீ. சுற்றளவுக்கு பரவிக் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்