நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவின் 119 ஆவது பிறந்த நாளான வெள்ளிக்கிழமை இந்தச் சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்- இஸ்ரோ செய்துள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் (PSLV) மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், நிலவை நோக்கி தொடர்ந்து நகர்த்தப்பட்டு, கடந்த 8ஆம் தேதி நிலவின் சுழற்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இக்கருவி நிலவில் மோதி இறங்கும்போது எழும் தூசுப் பொருட்கள் படமெடுக்கப்பட்டு அனுப்படும், அது தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்- இஸ்ரோ தெரிவித்துள்ளது.