ரயில்வே வருவாய் 15.76 விழுக்காடு அதிகரிப்பு!

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 15.76 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.38,481.83 கோடியாக இருந்த வருவாய் நடப்பாண்டில் ரூ.44,547.52 கோடியாக உயர்ந்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ரயில்வேத் துறைக்கு ரூ.30,151.97 கோடி கிடைத்துள்ளது. இதசென்ற ஆண்டைவிட (ரூ.25,688.18 கோடி) 17.38 விழுக்காடு கூடுதலாகும்.

நடப்பாண்டில் மேற்குறிப்பிட்ட 7 மாதங்களில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.12,575.05 கோடியை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டை (ரூ.11,160.90 கோடி) விட 12.67 விழுக்காடு அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 4,119.63 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதசென்ற ஆண்டு எண்ணிக்கையைவிட (3,867.08 மில்லியன்) 6.53 விழுக்காடு கூடுதலாகும் எ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்