இ‌ந்‌தியா - பெல்ஜியம் இடையே துறைமுக வ‌ர்‌த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (02:10 IST)
இந்தியா- பெல்ஜியம் இடையே வர்த்தகம், துறைமுக ஒத்துழைப்பை மேம்படுத்துவத‌ற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் ‌தி‌ங்க‌ட்‌கிழமஇந்தியா-பெல்ஜியம் இருநாடுகளுக்கு இடையேயான கப்பல் துறை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் கருத்து பரிமாற்றம் குறித்து இருநாடுகளைச் சேர்ந்த கப்பல் துறை வல்லுனர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதி‌லதுறைமுக நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, முதலீடு, இரு நாட்டு கப்பல் தொழில் துறை நடவடிக்கைகளில் எதிர்வரும் சவால்கள் அதை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மு‌ன்னதாக பெல்ஜிய நாட்டு அரசர் எச்எம் அல்பர்ட் மிமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இ‌ந்ஒப்பந்த‌ங்க‌ளசென்னை துறைமுகத்திற்கும் ஜிபுரு துறைமுகத்திற்கு இடையே நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கையெழுத்திடப்பட்டது.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், இந்தியா தரப்பில் சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் கே.சுரேஷ், ஜி.இ. இந்தியா நிறுவனத்தின் தலைவர் ம‌ற்று‌மதலைமை செயல் அதிகாரி தேஜ் பிரித் சோப்ரா ஆகியோரு‌ம், பெல்ஜியம் தரப்பில் ஆன்ட்வெர்பன் துறைமுக தலைமை செயல் அதிகாரி எட்டி புருனிக்ஸ், ஜிபுரு துறைமுக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோசின் கோன்ஸ் ஆகியோரு‌மகலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்