மகாராஷ்டிரா: பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 8 பேர் பலி!

சனி, 8 நவம்பர் 2008 (03:27 IST)
மகாராஷ்டிர மாநிலம் லதூர் அருகே மினி பேருந்து ஒன்று, மஞ்சாரா ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பேருந்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்தப் பேருந்து நேற்றிரவு லதூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பாலத்தில் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லத்தூரில் இருந்து பீட் மாவட்டம் அம்பேஜாகை நகருக்கு இப்பேருந்து சென்று கொண்டிருந்ததாகவும், ஓட்டுநர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததில் 40 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றில் பாய்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.

விபத்து பற்றி அறிந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்