ஜெர்மன் சிறுமி கற்பழிப்பு: அமைச்சர் மகனுக்கு காவல் நீடிப்பு!
சனி, 8 நவம்பர் 2008 (00:27 IST)
கோவா அமைச்சர் அடானாஸியோ மான்செரட்டேவின் மகனான ரோஹித்தை காவல்துறையினர் வெள்ளியன்று விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அவரது காவலை திங்கட்கிழமை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ரோஹித்திற்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையும் திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
21 வயதாகும் ரோஹித், ஜெர்மனைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கற்பழித்ததாகக் கூறி கடந்த 4ஆம் தேதி கோவா காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த சிறுமியின் தாயார் கலான்கட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ரோஹித் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1ஆம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைந்த ரோஹித்தை பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறுமிக்கு ஏற்கனவே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.