மைசூர்: கால்வாயில் விழுந்து 4 யானைகள் பலி!

வியாழன், 6 நவம்பர் 2008 (04:05 IST)
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு எல்லையில் கப்புசோகை என்ற கிராமத்தில், 5 யானைகள் கால்வாயில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தன.

இந்த கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் காட்டு பகுதியில் இருந்து 3 ஆண் யானைகளும், ஒரு பெண் யானையும் புகுந்து விளை பொருட்களை தின்று கொண்டிருந்தன.

இரவு நேர இருட்டால், அந்த யானைகள் நிலத்திற்கு அருகில் இருந்த கால்வாயை கவனிக்கவில்லை.

கால்வாய்க்குள் விழுந்த 4 யானைகளும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த சம்பவம் பற்றி அப்பகுதி வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி உயிரிழந்த யானைகளை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்