போலீஸ் காவலில் கோவா அமைச்சர் மகன்!

வியாழன், 6 நவம்பர் 2008 (03:32 IST)
ஜெர்மனைச் சேர்ந்த சிறுமியைக் கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள கோவா கல்வி அமைச்சர் அடானாசியோ மான்செரட்டின் மகன் ரோஹித்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த பனாஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் சரண் அடைந்து பின்னர் கைது செய்யப்பட்ட ரோஹித், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையினர் மனுவை ஏற்று ரோஹித் 3 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ரோஹித்தின் வழக்கறிஞர் அவரை போலீஸ் காவலில் அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்