க‌ண்‌ணிவெடித் தாக்குதல் : புத்ததேவ் பட்டாச்சார்ஜி, பாஸ்வான் தப்பினர்!

திங்கள், 3 நவம்பர் 2008 (11:18 IST)
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, மத்திய எஃகு, உரம், இராசயன அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் வந்த வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட க‌ண்‌ணிவெடித் தாக்குதலில் அவர்கள் காயமின்றித் த‌ப்‌பி‌த்தன‌ர்!

மேற்கு வங்கம் மாநிலம் மிட்னாபூர் மாவட்டம் சல்போனி என்ற இடத்தில் நாட்டின் மிகப்பெரிய எஃகு உருக்கு ஆலைத் திட்டத்தைத் துவக்கி வைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள், கலைச்சாண்டி கால் என்ற இடத்தில் ஒரு பாலத்தை கடந்து வந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த க‌ண்‌ணிவெடித் தாக்குதலில் பாஸ்வானின் காரை பின் தொடர்ந்து வந்த காவலர்களின் கடைசி கார் சேதமடைந்தது என்றும், இதில் கார் ஓட்டுநர் உட்பட 5 காவலர்கள் படுகாயமடைந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலை மாவோயிஸ்ட்டு ‌தீ‌விரவா‌திக‌ள் நடத்தியிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்