அஸ்ஸாம் தொட‌ர் குண்டு வெடிப்பு : 4 பேர் கைது!

ஞாயிறு, 2 நவம்பர் 2008 (12:58 IST)
அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்‌பிரு‌க்கலா‌ம் எ‌ன்று ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளர்!

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இ‌த்தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து ‌தீ‌விர ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌‌ம் காவ‌ல் துறை‌யின‌ர், குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நட‌ந்து வருவதாகவு‌ம், கு‌ண்டு வெடி‌ப்பு தொட‌ர்பான எ‌ந்த மு‌க்‌கிய‌த் தகவலு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை எ‌ன்று தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்