சோனியாவுக்கு கொலை மிரட்ட விடுத்த கேரள வாலிபர் கைது!
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (22:51 IST)
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்திக்கு 'இ-மெயில்' மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை மிரட்டலை அவர் 4 தினங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி இருந்தார். டெல்லி, கொச்சி உள்பட 4 நகரங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் அந்த இ-மெயிலில் அவர் தெரிவித்து இருந்தார்.
கொச்சிக்கு அருகில் உள்ள பலாரிவட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு இணையதள மையத்தில் இருந்து அவர் இந்த மிரட்டலை அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.