ராஜ்தாக்கரே மீது மேலும் 2 வழக்கு

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:05 IST)
மகராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே-விற்கு எதிராக பீகார் மாநிலத்தில் இருவேறு இடங்களில் மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.19ஆம் தேதி) ரயில்வே தேர்வு எழுதுவதற்காக வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த ஒரு மாணவன் உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜ் தாக்கரே-விற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ராஜ் தாக்கரே கைதானதைக் கண்டித்து மகாராஷ்டிராவில் நவ நிர்மாண் அமைப்பினர் வன்முறையில் இறங்கினர்.

இதற்கிடையே ராஜ்தாக்கரே-விற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே பீகாரில் ராஜ்தாக்கரேவைக் கைது செய்யக்கோரி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலு இரு வழக்குகள் பதிவாகியுள்ளன.

பாட்னா தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதியிடமும், மற்றொரு வழக்கு வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூரிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்