மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே வாரியத் தேர்வு எழுத வந்த வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது, ம௦காராஷ்டிர நவ நிர்மாண் சேனாவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்று மக்களவையில் எதிரொலித்தது.
அவை கூடியதும், வேறு சில பிரச்சினைகளும் எழுப்பப்பட்டதால் கடும் கூச்சல்-குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதேபோன்று மாநிலங்களவையிலும் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.