ராஜ்தாக்கரேவின் அரசியல் “மண்டல பயங்கரவாதம்”: மத்திய அரசு!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (03:53 IST)
நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் குலைக்கும் விதமாக மகாராஷ்டிரா வநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே செய்து வரும் அரசியல், “மண்டல பயங்கரவாதத்திற்க” இணையானது என மத்திய அரசு சாடியுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராஜ்தாக்கரே செய்து வருவதை மண்டல பயங்கரவாதம் என்று எளிதாகக் கூறிவிட முடியும். அதனால் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது.” என்றார்.

மகாராஷ்டிர மக்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு அவர்களது பிரச்சனைகளில் தலையிடும் ராஜ்தாக்கரேவும், அவரது ஆதரவாளர்களும், அம்மாநில மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகளால், பிற மாநிலங்களில் வசிக்கும் மராட்டியர்கள் பாதிக்கப்புக்கு உள்ளாவார்கள் என்று ஷகீல் அகமது எச்சரித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்