வங்கிகள் ரொக்கக் கையிருப்பு விகிதம் மேலும் குறைப்பு இல்லை!
சனி, 18 அக்டோபர் 2008 (00:48 IST)
வங்கிகள் கட்டாயமாக இருப்பில் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் குறைப்பதாக இல்லை என்று நிதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பணப்புழக்க நிலவரம் திருப்திகரமாக்வே உள்ளது என்று கூறியுள்ள அவர் வங்கிகள் ரொக்கக் கையிருப்பு விகித்ததை மேலும் குறைக்கவேண்டிய தேவையில்லை என்றார்.
9 விழுக்காடாக இருந்த வங்கிகள் கட்டயா ரொக்கக் கையிருப்பு விகிதம் தற்போது 2.5 விழுக்காடு குறைக்கப்பட்டு 6.5 விழுகாடாக உள்ளது. இதனை குறைத்ததன் மூலம் பணப்புழக்கம் ரூ. 1 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
மேலும் வங்கிகள் வேளாண் கடன்களை ரத்து செய்ததற்கு ஈடாக மத்திய ரிசர்வ் வங்கி ரூ.25,000 கோடியை வங்கிகளுக்கு அளித்துள்ளது.
பணப்புழக்கத்தை அதிகரிக்க வரும் 24-ம் தேதி இடைக்கால பணக்கொள்கை ஒன்றை உருவாக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதில் மேலும் சில முடிவுகள் எடுக்கப்ப்டலாம் என்று தெரிகிறது.