ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டகாலம் நீட்டிப்பு!
வியாழன், 16 அக்டோபர் 2008 (17:49 IST)
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை 11-வது ஐந்தாண்டு திட்ட காலம் முழுவதும் தொடர்ந்து நீட்டித்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
மொத்த திட்ட ஒதுக்கீடான ரூ.44,400 கோடியிலேயே தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 14 லட்சமாக உயரும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (ICDS) கீழ் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் சூடான சாப்பாடு வழங்குவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இக்குழுவினர் மாநில அரசுகளுடன் ஆலோசனைகள் நடத்தி பின்னர் பரிந்துரைகள் வழங்குவார்கள்.