க‌ர்நாடகா‌வி‌ல் அரசு பேரு‌‌ந்துக‌ள் நேரு‌க்கு நே‌ர் மோத‌ல்: 10 பே‌‌ர் ப‌லி!

திங்கள், 13 அக்டோபர் 2008 (12:19 IST)
க‌ர்நாடக மா‌நில‌ம் கோலா‌ரி‌ல் இ‌ன்று காலை 2 அரசு‌ப் பேரு‌ந்துக‌ள் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க்கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 10 பே‌ர் ப‌லியானா‌ர்க‌‌ள். மேலு‌ம் 19 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ஹனுமனஹ‌ள்‌ளி எ‌ன்ற இ‌ட‌த்‌தி‌ல், திரு‌ப்ப‌தி‌யி‌ல் இரு‌ந்து பெ‌ங்களூரூ‌வுக்கு வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ம‌ற்று‌ம் பெ‌ங்களூ‌ரி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு‌ச் செ‌ன்‌று‌க் கொ‌ண்டிரு‌ந்த க‌ர்நாடக போ‌க்குவர‌த்து‌க் கழக‌த்து‌க்கு‌‌ச் (KSRTC) சொ‌ந்தமான 2 பேரு‌ந்து‌க‌ள் நேரு‌க்கு நே‌ர்‌ மோ‌‌தி‌க்கொ‌ண்டன.

இ‌ந்த கோர ‌விப‌த்‌தி‌ல் 2 பேரு‌ந்‌துக‌ளி‌ன் ஓ‌ட்டுன‌ர்க‌ள் உ‌ள்பட 10 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 19 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். காயமடை‌ந்தவ‌ர்க‌ள் பெ‌ங்களூரூ‌வி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ளி‌ல் பலரது ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது. இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்