அசா‌மி‌ல் ச‌க்‌திவா‌ய்‌ந்த 2 வெடி‌கு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு!

ஞாயிறு, 12 அக்டோபர் 2008 (13:47 IST)
அ‌சா‌ம் மா‌‌நில‌ ச‌ட்‌ட‌ப்பேரவை க‌ட்டிட வளாக‌த்‌து‌க்கு அருகே ம‌க்க‌ள் நெரு‌க்க‌ம் ‌மிகு‌ந்த பரபர‌ப்பான பகு‌தி‌யி‌ல் ச‌‌க்‌திவா‌ய்‌ந்த 2 வெடிகு‌ண்டுக‌ள் இ‌ன்று க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

கா‌‌ஹ‌ி‌லி‌ப்பரா எ‌ன்னு‌மிட‌த்து‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள பாகோத‌த்தாபூ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் ஒரு பெ‌ட்டி‌யி‌ல் ம‌றை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 2 வெடிகு‌ண்டுகளை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று க‌ண்டு‌பிடி‌த்தன‌ர்.

இதையடு‌த்து வெடிகு‌ண்டு சோதனை ‌நிபுண‌ர்க‌ள் அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்து வெடிகு‌ண்டுகளை செய‌லிழ‌க்க‌ச் செ‌ய்தன‌ர். இதனா‌ல் அச‌ம்பா‌வித ‌நிக‌ழ்வு தடு‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.

இ‌ந்த இட‌த்து‌க்கு ‌மிக அரு‌கி‌ல் தா‌ன் அ‌ம்மா‌நில ச‌ட்டபேரவை ம‌ற்று‌ம் தலைமை‌ச் செயலக‌ம் உ‌ள்ளது

இ‌ததொட‌ர்பாக ச‌ந்தேக‌த்து‌க்‌கிடமான 2 பேரை கைது செ‌ய்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசார‌ி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌‌ம் தேடுத‌ல் வே‌ட்டை ‌தீ‌‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்