பிறந்த நாளன்று அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி!
சனி, 11 அக்டோபர் 2008 (17:07 IST)
இன்று தனது 67 வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உடல்நலக் குறைவால் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தித் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று தனது 67 ஆவது வயதில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ரசிகர்கள் இன்று அதிகாலை முதல் மும்பையில் உள்ள அமிதாப்பின் 'ஜல்சா' இல்லம் முன்பு கூடினர்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினரும் பெருமளவில் அமிதாப்பின் வீட்டு முன்பு செய்தி சேகரிக்க திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் உடல்நலக் குறைவால் அமிதாப் பச்சன் ஆம்புலன்ஸ் மூலம் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தமடைந்தனர்.