நீர்நிலைகளை சீரமைக்க ரூ.2,750 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:29 IST)
நமது நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க ரூ.2,750 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வேளாண்மையுடன் நேரடியாக தொடர்புடைய நீர் நிலைகளை பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, புனரமைப்பதற்கான திட்டம் 2005-ம் ஆண்டில் சோதனை ரீதியாக துவக்கப்பட்டது. இதற்கான செலவு ரூ.300 கோடியாகும்.
இதில் 75 விழுக்காட்டை மத்திய அரசும், 25 விழுக்காட்டை தொடர்புடைய மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன.
இத்திட்டம் வாயிலாக 15 மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களில் இருக்கும் 1,098 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 894 நீர்நிலைகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
11-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இத்திட்டத்தை நாடெங்கிலும் விரிவுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டச் செலவில் 25 விழுக்காடான ரூ.2,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 விழுக்காட்டை அந்தந்த மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களும், கள ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. பல்கலைக் கழகங்கள், நிறுவனங்களின் உதவியுடன் சுயேட்சையான மதிப்பீடும், ஆய்வும் அவ்வப்போது நடத்தப்படுகிறது.