பெங்களூரு நகரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தார்வாட் நகரத்தில் சிங்கனஹள்ளி பாலத்தின் கீழ் சந்தேகத்திற்குரிய சில பார்சல்கள் கிடப்பதைக் கண்ட பொது மக்கள் காவலர்களுக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து, பெங்களூருவிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் தார்வாட் விரைந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில் அந்த பாலத்தைச் சுற்றி 5 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்களால் இணைக்கப்பட்ட சிலிண்டர் வெடிகுண்டு வகையைச் சேர்ந்தவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.