மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும் நோக்கத்தில்தான் நானாவதி ஆணைய அறிக்கையின் முதல் பகுதி குஜராத் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
"கோத்ரா சம்பவம் தொடர்பாக ஒரு பகுதி அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில் எரிப்புக்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. முழுமையான அறிக்கைக்காக காத்திருக்கிறோம்' என்று குஜராத் மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் ஹரிபிரசாத் கூறினார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், விசாரணையில் உண்மை இல்லாததால் நானாவதி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை விவரங்கள் குறித்து ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்றார்.